சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனு: தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்


சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனு: தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
x

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனு தசரா விடுமுறைக்குப் பின் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370- கடந்த 2019- ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த 5 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் ஓய்வு பெற்றுவிட்டனர். இதையடுத்து பழைய அமர்வு கலைக்கப்பட்டது. புதிய அமர்வு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமை நீதிபதியாக உள்ள உதய் உமேஷ் லலித் தலைமையிலான இந்த புதிய அமர்வு, வழக்கை விசாரிக்க உள்ளது. இதில், நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எஸ். ரவீந்திர பட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு அந்தஸ்துக்கு எதிரான மனுவை தசரா விடுமுறைக்குப் பின் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


Next Story