சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. பெயரில் போலி முகநூல் கணக்கு
சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் மந்திரி ஆவார். இந்த நிலையில் சுரேஷ்குமார் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய மர்மநபர் ஒருவர் சுரேஷ்குமார் பேசுவது போல சிலருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அந்த குறுந்தகவலில் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், விரைவில் தந்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதுபற்றி சுரேஷ்குமாரின் கவனத்திற்கு சென்றது. இந்த நிலையில் சுரேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் எனது பெயரில் யாரோ போலியாக முகநூல் தொடங்கி பணம் வசூலித்து வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story