சுசில் மந்த்ரி, அவரது மகனிடம் சி.ஐ.டி. விசாரணைக்கு தடை
வாடிக்கையாளர்களிடம் பணமோசடி வழக்கில் சுசில் மந்த்ரி, அவரது மகனிடம் சி.ஐ.டி. விசாரணைக்கு தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு மந்த்ரி டெவலப்பர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக சுசில் மந்த்ரி உள்ளார். இந்த நிலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்வதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.1,000 கோடி அளவிற்கு பணத்தை பெற்று முறைகேடு செய்ததாக மந்த்ரி நிறுவனம் மற்றும் இயக்குனர் சுசில் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சுசில் மந்த்ரியை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் பணமோசடி வழக்கில் அவர் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசிலையும், அவரது மகன் பிரதிக்கையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே சி.ஐ.டி. விசாரணையை ரத்து செய்ய கோரி சுசில் மந்த்ரி சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, சுசில் மற்றும் அவரது மகனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.