பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x

பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜண்ணா. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு ஒரு பெண் சென்றிருந்தார். அப்போது தொழில்அதிபர் வீரேந்திர பாபு தன்னிடம் ரூ.15 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் ராஜண்ணாவிடம் அந்த பெண் புகார் அளித்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய செல்போன் எண்ணை கொடுத்த ராஜண்ணா, ஏதாவது உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளும்படி பெண்ணிடம் கூறி இருந்தார். பின்னர் பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் பல தகவல்களை ராஜண்ணா அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன் தன்னுடன் உல்லாசமாக இருக்க தங்கும் விடுதிக்கு வரும்படியும், இதற்காக அறை எடுத்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் ராஜண்ணா அந்த பெண்ணிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பெண் கொடுத்த புகாரின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் லட்சுமி பிரசாத் விசாரணை நடத்தி, கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்திரசேகரிடம் அறிக்கை அளித்திருந்தார். அதில், புகார் அளிக்க வந்த பெண்ணை தங்கும் விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராஜண்ணா அழைத்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜண்ணாவை பணி இடைநீக்கம் செய்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story