உப்பள்ளி விரைவு ரெயில்கள் தற்காலிக ரத்து; தென்மேற்கு ரெயில்வே அலுவலகம் தகவல்


உப்பள்ளி விரைவு ரெயில்கள் தற்காலிக ரத்து; தென்மேற்கு ரெயில்வே அலுவலகம் தகவல்
x

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் உப்பள்ளி விரைவு ரெயில்கள் தற்காலிக ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

உப்பள்ளி;

தென்மேற்கு ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே தோர்ணாஹள்ளி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உப்பள்ளி விரைவு ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.


ஹொசபேட்டையில் இருந்து உப்பள்ளி ேநாக்கி செல்லும் விரைவு ரெயில் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் உப்பள்ளியில் இருந்து ஹொசபேட்டை செல்லும் ரெயில் ஜூன் 5-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.


மேலும், உப்பள்ளியில் இருந்து விஜயவாடா செல்லும் விரைவு ரெயில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 10-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் விஜயவாடா முதல் உப்பள்ளி வரை இயக்கப்படும் விரைவு ரெயில் ஜூன் 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரத்தாகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story