வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தம்பதியின் உடல்கள் மீட்பு


வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட  தம்பதியின் உடல்கள் மீட்பு
x

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தம்பதியின் உடல்கள் மீட்கப்பட்டன.

கலபுரகி: கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி அருகே வசித்து வந்தவர் புக்கப்பா நரசப்பா (வயது 58). இவரது மனைவி யாதம்மா (54). இவர்கள் 2 பேரும் கர்நாடகம்-தெலுங்கானா எல்லையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா்கள். கடந்த 26-ந் தேதி தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கலபுரகி மாவட்டத்தில் ஓடும் காகினா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில், காய்கறி வியாபாரத்தை முடித்து விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பிய புக்கப்பா நரசப்பா, அவரது மனைவி யாதம்மா ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருந்தார்கள். அவர்களை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு இருந்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிஞ்சோலி அருகே ஜட்டூரு அருகே 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.


Next Story