பெட்ரோல் - டீசல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க புதிய யுக்தியை கையாண்ட ஸ்விக்கி ஊழியர்...!
ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் குதிரையைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை டெலிவரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை,
மும்பையில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சாலைகளை கடக்க முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதால் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மும்பையில் கனமழைக்கு இடையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் குதிரையைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை டெலிவரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர் பயணம் செய்வது படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரபட்டததை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.
வெறும் ஐந்தே நொடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் மும்பை என தெரிய வருகிறது. அதில், உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி டெலிவரி நபர் ஒருவர் குதிரையில் செல்வது இடம்பெற்று உள்ளது.
இதனை கண்ட சமூகதளவாசிகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு ஐடியாக நல்லாதாக இருக்கிறதே....! என குறிப்பிட்டு வருகிறார்கள்.