தையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


தையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மங்களூரு-

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து பல இடங்களில் சூதாட்டமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

தையல்காரர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள செவந்திகுட்டே பகுதியை சேர்ந்தவர் பிரவீன் அல்வா (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். பிரவீன், தொக்கொட்டு சந்திப்பு பகுதியில் டெய்லர் கடை வைத்து தொழில் செய்து வந்தார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இவர் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், சூதாட்டத்தில் பிரவீன் பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை பிரவீன் தனது கடையில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் உல்லால் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story