போலீசாருக்கு சவால் விட்ட தாலுகா அலுவலக ஊழியர் கைது


போலீசாருக்கு சவால் விட்ட தாலுகா அலுவலக ஊழியர் கைது
x

போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கிய விவகாரத்தில் போலீசாருக்கு சவால் விட்ட தாலுகா அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருபவர் அன்னப்பா. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு போலியாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கி வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அன்னப்பா தப்பியோடி தலைமறைவானார்.

மேலும், அவர் தன்னை முடிந்தால் பிடித்து காட்டுமாறு போலீசாருக்கு சவால் விட்டு இருந்தார். இந்த நிலையில் அன்னப்பாவின் செல்போன் சிக்னலை வைத்து அவரது இருப்பிடத்தை போலீசார் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் என்.ஆர்.புரா தாலுகா புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அன்னப்பாவை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story