சில்க் போர்டு பஸ் நிலையத்தில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்-மாநகராட்சி உத்தரவு


சில்க் போர்டு பஸ் நிலையத்தில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்-மாநகராட்சி உத்தரவு
x

சில்க் போர்டு பஸ் நிலையத்தில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், பெங்களூருவில் புறவழிச்சாலைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த சாலைகளில் குப்பைகளை அகற்றுவது, தெருவிளக்குகளை மூடி மறைத்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது, நடைபாதைகளை சீர் செய்வது, சேதம் அடைந்த சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு துஷார் கிரிநாத் உத்தரவிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனம், சில்க் போர்டு சந்திப்பில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை பெய்யும்போது மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. அவ்வாறு மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். மேலும் சில்க் போர்டு பஸ் நிலையத்தில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை முழுமையாக விரைவாக முடித்து வழக்கமான செயல்பாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளேன். பன்னரகட்டா ரோட்டில் ஜே.டி.மர சந்திப்பில் சாலைகளை சீரமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன். புறவழிச்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள குறைகளை சரிசெய்யும்படியும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.


Next Story