பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது


பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது
x

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.

சீனிவாசப்பூர்:-

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா அட்டகல் கிராமத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்தப்பகுதியை சேர்ந்த சிறுமி படித்து வருகிறாள். அதேப்பள்ளியில் சிவக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அந்த சிறுமியை ஆசிரியர் சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் சிறுமி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். இதனால் அவளை, பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது ஆசிரியர் சிவக்குமார் பலாத்காரம் செய்ததை கூறி சிறுமி கதறி அழுதுள்ளாள். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி கவுனிபள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமிக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Next Story