திருமணத்திற்கு காதலன் மறுப்பு; விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை


திருமணத்திற்கு காதலன் மறுப்பு; விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
x

சிவமொக்காவில் திருமணத்திற்கு காதலன் மறுத்ததால் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

சிவமொக்கா:

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ஹாலுகுட்டே கிராமம் அருகே உள்ள ஆனேகேரி கியாம்ப் கிராமத்தில் வசித்து வந்தவர் அனுஷா(வயது 19). இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்தது. அந்த வேலைக்காக மஞ்சுநாத் என்பவர் வந்தார். கடந்த 2 மாதங்களில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து அனுஷா திருமணத்திற்கு வற்புறுத்தினார். ஆனால் மஞ்சுநாத், அனுஷாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அனுஷா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு காதலன் மஞ்சுநாத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து அனுஷாவை மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனுஷா உயிரிழந்தார்.


Next Story