காதலி திருமணத்துக்கு மறுத்ததால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை
காதலி திருமணத்துக்கு மறுத்ததால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவமொக்கா: காதலி திருமணத்துக்கு மறுத்ததால் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சொரப் அருகே நடந்துள்ளது.
காதல்
சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா சந்திரகுத்தி கிராமத்தை சோ்ந்தவர் பிரவீன் (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கும் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். மேலும் அவர்கள் தனியாக ஊர்சுற்றி வந்தனர். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் பிரவீன், தனது காதலியிடம் திருமணம் செய்து ெகாள்ளலாம் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பிரவீன் தொடர்ந்து இளம்பெண்ணிடம் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தார். ஆனாலும் திருமணத்துக்கு இளம்பெண் சம்மதிக்கவில்லை.
பிணமாக மீட்பு
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 18-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பிரவீனை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் சொரப் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு பிரவீனை தேடிவந்தனர்.
இ்ந்த நிலையில் நேற்றுமுன்தினம் சந்திரகுத்தி கோவில் அருகே உள்ள ஏாியில் ஆண் பிணம் மிதப்பதை பாா்த்த அந்த பகுதி மக்கள் உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஏரியில் இருந்து சடலத்தை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் மாயமான பிரவீன் என்பது தெரியவந்தது.
தற்கொலை
இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில், காதலி திருமணத்துக்கு மறுத்ததால் மனமுடைந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.