"ஜனாதிபதி மாளிகைக்கு மவுனம் காக்கும் ஒரு சிலை தேவையில்லை": திரவுபதி முர்முவுக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் அதிரடி கருத்து


ஜனாதிபதி மாளிகைக்கு மவுனம் காக்கும் ஒரு சிலை தேவையில்லை: திரவுபதி முர்முவுக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் அதிரடி கருத்து
x

பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு தனது கட்சியின் ஆதரவு உண்டு என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆளும் பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, "ஜனாதிபதி மாளிகைக்கு(ராஷ்திரபதி பவன்) ஒரு சிலை தேவையில்லை.

யஷ்வந்த் சின்ஹா பேசுவதை நீங்கள் பலமுறை கேட்டிருக்கலாம். ஆனால் திரவுபதி முர்மு பேசி நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவர் ஒரு முறை கூட ஊடகங்களில் பேசவில்லை" என்றார்.

இதன் மூலம், பாஜக சொல்வதை கேட்டு செயல்படும் முகவர் போல செயல்படும் ஒருவர் நாட்டுக்கு ஜனாதிபதியாக தேவையில்லை என்று கூறினார்.

இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள பாஜக தரப்பு, ஒட்டுமொத்த ஆதிவாசி சமூகத்தையும் அவர் கேவலப்படுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டினர்.


Next Story