தெலுங்கானா தனியார் ஓட்டல் தீ விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!


தெலுங்கானா தனியார் ஓட்டல் தீ விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!
x

தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்,

தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றின் தரை தளத்தில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங் செய்து கொள்ளும் வசதி அமைந்துள்ளது. இந்த நிலையில், அந்த பிரிவில் நேற்றிரவு திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஏற்பட்ட கரும் புகையானது முதல் மற்றும் 2-வது தளங்களுக்கும் சென்றுள்ளது. இதில், ஓட்டலில் தங்கியிருந்த நபர்களில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. ஒரு சிலர் கீழே குதித்து சென்று தப்பியுள்ளனர். சிலரை அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஓடி சென்று மீட்டனர். அவர்கள் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

இந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.பிரதமரின் தேசிய நிவாரண நிதியி லிருந்து ரூ.2 லட்சம் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story