தெலுங்கு நடிகர் சலபதி ராவ் காலமானார்!
தெலுங்கு நடிகர் சலபதி ராவ் (78) நெஞ்சுவலி காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார்.
ஐதராபாத்,
தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகராக சலபதி ராவ் இன்று அதிகாலை காலமானார். மூத்த நடிகர் சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இவர் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருந்ததி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story