அஜ்ஜாம்புராவில் பயங்கரம்: பார்வையற்ற ஆசிரியர் கல்லால் அடித்து கொலை


அஜ்ஜாம்புராவில் பயங்கரம்: பார்வையற்ற ஆசிரியர் கல்லால் அடித்து கொலை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அஜ்ஜாம்புராவில் பார்வையற்ற ஆசிரியர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சிக்கமளூரு-

சிவமொக்கா மாவட்டம் ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர் மாலதேஷ் ஜோஷி (வயது 54). பார்வையற்றவரான இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் சொந்த வேலை காரணமாக மாலதேஷ் நேற்று முன்தினம் சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா டவுனுக்கு வந்தார். இதையடுத்து வேலை முடிய இரவு நேரம் ஆனதால் அவர் டவுனில் உள்ள விடுதியில் தங்கினார். இந்தநிலையில் மறுநாள் காலை நீண்ட நேரம் அறையின் கதவை திறக்காததால் விடுதி ஊழியர்கள் சந்ேதகம் அடைந்தனர். இதையடு்த்து ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாலதேஷ் கல்லால் தாக்கி கொைல செய்யப்பட்டு கிடந்தார்.

அவரை மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அஜ்ஜாம்புரா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த மாலதேஷின் உடலை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் யாரோ மர்மநபர்கள் அறையில் புகுந்து ஆசிரியரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விடுதி, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story