பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் முறையீடு
மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி ஏ.பி.செல்வி சார்பில் வக்கீல் ராகுல் ஷியாம் பண்டாபி முறையிட்டார்.
புதுடெல்லி,
கள்ளக்குறிச்சி மாணவி மரண புகார் வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக மாணவியின் தாய் ஏ.பி.செல்வி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி ஏ.பி.செல்வி சார்பில் வக்கீல் ராகுல் ஷியாம் பண்டாபி முறையிட்டார்.
முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர். கவாய், மேல்முறையீடு மனுவை விசாரித்த அமர்வு இது அல்ல என்றும், மார்ச் 27-ந்தேதி மீண்டும் முறையிடுமாறும் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story