விவசாயிகளை தாக்கிய கருங்குரங்கு பிடிபட்டது; கிராம மக்கள் நிம்மதி


விவசாயிகளை தாக்கிய கருங்குரங்கு பிடிபட்டது; கிராம மக்கள் நிம்மதி
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நியாமதி அருகே, விளைநிலத்திற்குள் புகுந்து விவசாயிகளை கடித்து அட்டகாசம் செய்து வந்த கருங்குரங்கை வனத்துறையினர் பிடித்து கூண்டில் அடைத்தனர்.

சிக்கமகளூரு;

கருங்குரங்குகள்

தாவணகெரே மாவட்டம் நியாமதி தாலுகா சாஸ்வேனஹள்ளி கிராமம் அருகே பில்கேட் எனும் பகுதி உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகளான காட்டுயானை, கரடி, குரங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இந்த நிலையில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விளைநிலங்களில் மக்காசோளம் பயிரிட்டு இருந்தனர்.

மேலும் அந்த மக்காச்சோளப்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி கருங்குரங்குகள், விளைநிலத்திற்குள் புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த மக்காசோளப்பயிர்களை தின்றும், நாசப்படுத்தியும் வந்துள்ளது.

4 பேர் காயம்

இதைப்பார்த்து அதிா்ச்சி அடைந்த விவசாயிகள் தாங்களாகவே கருங்குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதனால் அதில் ஒரு குரங்கு மட்டும் விவசாயிகளை கடித்து தாக்கியுள்ளது. மீதமுள்ள குரங்குகள் ஓடிவிட்டன. இதில் படுகாயமடைந்த 4 விவசாயிகளை அங்கிருந்தவா்கள் மீட்டு நியாமதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நியாமதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் ே்பரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில் விவசாயிகளை கடித்த குரங்கு மட்டும் மக்காசோள பயிர்களுக்கு இடையே நின்றிருந்தது.

கூண்டில் அடைப்பு

இதையடுத்து வனத்துறையினர் பாகல்கோட்டை மாவட்டம் ரோன் பகுதியில் உள்ள குரங்கு பிடிப்பவர்களை அழைத்து வந்து அட்டகாசம் செய்து வரும் குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு கருங்குரங்கை பிடித்தனர். மேலும் அதனை கூண்டுக்குள் அடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கருங்குரங்கை பார்க்க படையெடுத்து வந்தனர். மேலும் அட்டகாசம் செய்து வந்த கருங்குரங்கு பிடிப்பட்டதால் கிராம மக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story