குளத்தில் முழ்கி சிறுவன் சாவு


குளத்தில் முழ்கி சிறுவன் சாவு
x

உப்பள்ளி அருகே, குளத்தில் முழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் மெகபூப் நகரில் வசித்து வருபவர் ஜாபருல்லா. இவரது மகன் தன்வீர் சேக் (வயது 16). இவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து புடர்சிங்கி கிராமத்தில் அருகே உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றான்.

பின்னர் அவன் குளத்தில் ஆழமான பகுதியில் குளத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென தன்வீர் நீரில் முழ்கி தத்தளித்து உள்ளான். இதைகண்ட அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் அவனை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அதற்குள் சிறுவன் தன்வீர் சேக் நீரில் முழ்கி உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உப்பள்ளி புறநகர் போலீசாா், சிறுவன் தன்வீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story