சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு20 ஆண்டு சிறை


சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 24 March 2023 10:00 AM IST (Updated: 24 March 2023 10:04 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு20 ஆண்டு சிறை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாரகாடாவை சேர்ந்தவர் தயானந்தா தன்னவர் (வயது30). டிரைவர் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த ஆண்டு (2022) சிறுமியை ஆசைவார்த்தை கூறி தயானந்தா, ஆட்டோவில் ஹம்பன் கட்டாவுக்கு அழைத்து சென்று ள்ளார். அவர்கள் அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது தயானந்தா, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை அவர் மிரட்டி உள்ளார்.

பின்னர் தயானந்தா,சிறுமியை வீட்டில் விட்டு சென்றார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மங்களூரு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தயானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.

கோர்ட்டில், மங்களூரு போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கே.எம்.ராதாகிருஷ்ணா தீர்ப்பு வழங்கினார். அதில் தயானந்தா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். தேசிய வங்கியில் சிறுமியின் பெயரில் ரூ.2 லட்சம் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.


Next Story