தலையில் செங்கல் விழுந்து 8 மாத குழந்தை சாவு


தலையில் செங்கல் விழுந்து   8 மாத குழந்தை சாவு
x

தலையில் செங்கல் விழுந்து 8 மாத குழந்தை இறந்தது

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதிக்கு வேதாந்த் என்ற பெயரில் 8 மாத குழந்தை இருந்தது. ஜனார்த்தன் மனைவி, குழந்தையுடன் வாடகை வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை வேதாந்த் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தது. அப்போது கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து ஒரு செங்கல், வேதாந்தின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தையை பெற்றோர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை வேதாந்த் இறந்து போனது. இதுபற்றி அறிந்த பெங்களூரு புறநகர் மாவட்ட நிர்வாகம் வேதாந்த் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. சம்பவம் குறித்து தேவனஹள்ளி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story