தொழில்அதிபர் வீட்டுக்குள் புகுந்து குடிபோதையில் ரகளை செய்த ஆட்டோ டிரைவர்


தொழில்அதிபர் வீட்டுக்குள் புகுந்து குடிபோதையில் ரகளை செய்த ஆட்டோ டிரைவர்
x

பண்ட்வால் அருகே தொழில்அதிபர் வீட்டுக்குள் புகுந்து குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர், அவர்களை கத்தியால் குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களூரு;

குடிபோதையில் ரகளை

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா அருகே சண்டலிகே கிராமத்தை சேர்ந்தவர் நவீன் ஷெட்டி. தொழில்அதிபர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நவீன் ஷெட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கணேஷ் ஷெட்டி என்பவர் மது போதையில் வந்துள்ளார்.

அப்போது கணேஷ் ஷெட்டி திடீரென்று நவீன் ஷெட்டியின் வீட்டுக்குள் புகுந்தார். மேலும் அவர் நவீன் ஷெட்டி மற்றும் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நவீன் ஷெட்டி மற்றும் அவரது மனைவியை குத்த முயன்றார்.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன் ஷெட்டி மற்றும் அவரது மனைவி, கூச்சலிட்டனர். அவர்களது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்த வந்தனர். அவர்கள் கணேஷ் ஷெட்டியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை விட்டலா போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விட்டலா போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ் ஷெட்டியை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், மதுபோதையில் கணேஷ் ஷெட்டி, தொழில்அதிபர் நவீன் ஷெட்டி வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான கணேஷ் ஷெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story