சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் வழங்கிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்


சுப்ரீம் கோர்ட்டில்  5 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் வழங்கிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 4 Feb 2023 8:25 PM IST (Updated: 4 Feb 2023 8:29 PM IST)
t-max-icont-min-icon

அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். புதிய நீதிபதிகள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளனர். அவர்கள் பதவியேற்றதும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும்.


Next Story