தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு


தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு
x

தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகள் தொடர்பான தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் இருந்து மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.

புதுடெல்லி,

தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகள் தொடர்பான டிஜிட்டல் தனி உரிமையை பாதுகாக்க வகை செய்யும் தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் இருந்து மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சட்ட வழிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் புதிய மசோதாவை கொண்டு வர அரசு முடிவு செய்திருப்பதால் இந்த மசோதாவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவை மிக விரிவாக பரிசீலித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, 81 திருத்தங்களையும் 12 பரிந்துரைகளையும் வழங்கியிருப்பதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சட்ட வழிமுறைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.


Next Story