மத்திய மந்திரி அனுராக் தாகூரை நேரில் சந்தித்த 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினர்


மத்திய மந்திரி  அனுராக் தாகூரை நேரில் சந்தித்த  தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினர்
x

'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் படக்குழுவினரை மத்திய மந்திரி அனுராக் தாகூர் நேரில் சந்தித்துள்ளார்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டனர். இதில் பொம்மன் நிரந்தர பணியாளராகவும், பெள்ளி தற்காலிக பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் அதை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தை ஊட்டியை சேர்ந்த இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எடுத்தார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் படக்குழுவினரை மத்திய மந்திரி அனுராக் தாகூர் நேரில் சந்தித்துள்ளார் .சந்திப்பில் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ், தயாரிப்பாளர் குனித் மோங்கா, நெட்பிளிக்ஸ் சார்பில் மோனிகா ஆகியார் இடம்பெற்றனர் .

முன்னதாக 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் படக்குழுவினரை பிரதமர் மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story