திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு
x

நாளை மறுநாள் (2-ந்தேதி) முதல், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்காக டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி,

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 23-ம்தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23-ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் நாளை (திங்கட்கிழமை) இரவுடன் நிறைவுபெறுகிறது. இதற்காக ஏற்கனவே சுமார் 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடைசி நாளான நாளை இரவு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் கதவுகள் அடைக்கப்படுகிறது. முன்னதாக நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் 100 பாசுரங்கள் பாடப்படும். அதன்பிறகு சொர்க்கவாசல் கதவுகள் அடைக்கப்படும்.

தரிசன டோக்கன்கள், டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்களும் திருமலைக்கு வரலாம். அதற்கு தடை ஏதும் இல்லை என்றும், ஆனால் ஜனவரி 1-ந்தேதி (நாளை) வரை கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் 2-ந்தேதி முதல், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்காக டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Next Story