அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு
அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.
கவுகாத்தி,
அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்
அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதால் ,இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் 28 மாவட்டங்களில் 33 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
Related Tags :
Next Story