கோலாரில் 38 மையங்களில் தேர்வு நடக்கிறது


கோலாரில் 38 மையங்களில் தேர்வு நடக்கிறது
x

இன்று ஆசிரியர்கள் நியமன தேர்வு நடைபெற உள்ள நிலையில் கோலாரில் 38 மையங்கள் தயாராக இருப்பதாக கலெக்டர் வெங்கடராஜா தெரிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:-

கர்நாடகத்தில் ஆசிரியர் நியமன தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதேபோல், கோலாரில் இந்த தேர்வு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வெங்கடராஜா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோலார் மாவட்டத்தில் ஆசிரியர் நியமன தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு 17 மையங்களிலும், பட்டப்படிப்பு ஆசிரியர்கள் நியமன தேர்வு 21 மையங்களிலும் நடக்க உள்ளது. ேதர்வு நடப்பதையொட்டி மையங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story