நெஞ்சு வலியால் உயிரிழந்த மாணவியின் கண்கள் தானம்


நெஞ்சு வலியால் உயிரிழந்த மாணவியின் கண்கள் தானம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:30 AM IST (Updated: 31 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரேவில் நெஞ்சு வலியால் உயிரிழந்த மாணவியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே டவுன் எம்.ஜி.ரோடு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். அவர் அதே பகுதியில் நகை மற்றும் வெள்ளி வேலை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் வைஷ்ணவி (வயது 15). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்தது. இதனால் வைஷ்ணவி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் அவளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வைஷ்ணவியை அவரது பெற்றோர் மூடிகெரேவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வைஷ்ணவியின் பெற்றோர், அவளது கண்களை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அவரது கண்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து ஹாசனில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் கண்களை தானம் செய்த, மாணவியின் பெற்றோரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Next Story