பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு தாமதமாக புறப்பட்ட விமானம்


பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு தாமதமாக புறப்பட்ட விமானம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.

பெங்களூரு:-

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் கொல்கத்தாவுக்கு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணிக்க காத்திருந்த பயணிகள் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் உடனடியாக விமான நிறுவன ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டனர்.

அப்போது அவர்கள் முறையாக பதில் கூறவில்லை என தெரிகிறது. இதையடுத்து சுமார் 5 மணி நேரம் தாமதமாக விமானம் பெங்களூருவில் இருந்து புறப்பட்டது. அதில் பயணிகள் ஏறி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானத்தில் பயணிக்க காத்திருந்த மருத்துவ மாணவர் சம்ஷா ரகீம் கூறுகையில், 'கொல்கத்தாவில் உள்ள எனது தாய் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக இந்த விமானத்தில் முன்பதிவு செய்து பயணிக்க இருந்தேன். ஆனால் தற்போது தாமதமாகி விட்டது' என்று கூறினார். மேலும் விமானம் தாமதம் ஆனதால் குறித்த நேரத்தில் போக முடியவில்லை என கூறினார்.


Next Story