பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி


பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி
x

பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தாள்

ராமநகர்:

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா பிச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி உமா. இந்த தம்பதியின் மகள் ரக்ஷா (வயது 4). இவள் கனகபுராவில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி வேனில் ரக்ஷா வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தாள்.

வேனின் படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில்ரக்ஷா அமர்ந்து இருந்தாள். பிச்சனஹள்ளி பகுதியில் வேன் சென்ற போது வேனின் படிக்கட்டு கதவு திறந்து இருந்து உள்ளது. இதனை கவனிக்காமல் வேனை டிரைவர் ரமேஷ் வேகமாக ஓட்டி சென்று உள்ளார். அப்போது வேன் ஒரு திருப்பத்தில் திரும்பியது. இந்த சந்தர்ப்பத்தில் வேனில் இருந்து ரக்ஷா சாலையில் தவறி விழுந்தாள். அப்போது வேனின் பின்பக்க சக்கரம் ரக்ஷா மீது ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரக்ஷா உடல் நசுங்கி இறந்தாள். சம்பவம் குறித்து கனகபுரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ரமேசை கைது செய்தனர்.


Next Story