கடலில் மூழ்கி தொழிலாளி பலி
உல்லால் கடலில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள முலலியை சேர்ந்தவர் காலித்(வயது51). இவர் தனது குடும்பத்துடன் உல்லால் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றார். அப்போது காலித் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடலில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கடலில் எழுந்த ராட்சத அலையால் காலித் மற்றும் அவரது மகன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். இதில் அருகே இருந்த கடலோர காவல் படை குழுமத்தினர் அவர்களை மீட்க கடலுக்குள் சென்றனர். இதில் காலித் பிணமாக மீட்கப்பட்டார். அதாவது அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக உல்லால் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் அலையில் சிக்கிய காலித்தின் மகனை மீட்டு சிகிச்சைக்காக தேரளகட்டே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.