காதல் ஜோடி பேசிய விவகாரம்; போலீசில் விமான நிறுவனம் புகார்


காதல் ஜோடி பேசிய விவகாரம்;  போலீசில் விமான நிறுவனம் புகார்
x

காதல் ஜோடி பேசிய விவகாரத்தில் போலீசில் விமான நிறுவனம் புகார் அளித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காதல் ஜோடிகள் அருகருகே அமர்ந்து விமானங்கள் புறப்படும் நேரங்கள் பாதுகாப்பு குறித்து பேசியப்படியே குறுந்தகவல் அனுப்பி சாட்டிங் செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்து அவர்களிடம் விசாரித்தனர். அப்போது பெங்களூரு, மும்பைக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.

அவர்கள் 2 பேரும் சேர்ந்து விமான பாதுகாப்பு குறித்து விளையாட்டாக செல்போனில் மாறி மாறி குறுந்தகவல் அனுப்பி சாட்டிங் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் விமான பாதுகாப்பு குறித்து பேசியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமான நிறுவனம் பஜ்பே போலீசில் அதுதொடர்பாக புகார் அளித்துள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story