சிக்கனில் பதுக்கி கைதிக்கு கஞ்சா கடத்தியவர் கைது
சிக்கனில் பதுக்கி கைதிக்கு கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
விஜயாப்புரா: கர்நாடக மாநிலம் விஜயாப்புரா டவுனில் மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியான சாருக் என்பவரை காண நேற்்று அவரது நண்பர் பிரஜ்வல் லட்சுமண் என்பவர் வந்தார். அப்போது அவர் சிக்கன் குழம்பும் எடுத்து வந்திருந்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சிக்கன் துண்டுகளை எடுத்து பிரித்துப் பார்த்தனர்.
அப்போது ஒவ்வொரு சிக்கன் துண்டுக்குள் 2 கிராம் அளவில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறாக 9 சிக்கன் துண்டுகளில் மொத்தம் 18 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆதர்ஷாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரஜ்வல் லட்சுமணிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story