'கந்ததகுடி' படம் நாளை மறுநாள் ஓ.டி.டி.யில் வெளியீடு
புனித்ராஜ்குமார் கடைசியாக நடித்த கந்ததகுடி படம் நாளை மறுநாளை ஓ.டி.டி.யில் வெளியீடப்படுகிறது.
பெங்களூரு:-
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் திடீரென்று உயிரிழந்தார். அவரது மறைவு கர்நாடக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் புனித் ராஜ்குமார் 'கந்ததகுடி' என்ற ஆவண படத்தில் நடித்திருந்தார். இதுதான் அவரது கடைசி படமாகும். வனத்தை பாதுகாப்பது தொடர்பான இந்த படம், புனித் ராஜ்குமாரின் கனவு படமாகும்.
இந்த படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் என்பதால், அவரது ரசிகர்கள் 'கந்ததகுடி' படத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கர்நாடகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இந்த படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'கந்ததகுடி' படத்தை ஓ.டிடி.யில் வெளியிட புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் முடிவு செய்தார். அதன்படி, புனித்ராஜ்குமாரின் பிறந்தநாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அமேசான் பிரைம் தளத்தில் 'கந்ததகுடி' படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.