சுதந்திர தினத்தையொட்டி, ஈத்கா மைதானத்தில் தேசிய கொடி ஏற்றப்படும்-பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி


சுதந்திர தினத்தையொட்டி, ஈத்கா மைதானத்தில் தேசிய கொடி ஏற்றப்படும்-பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
x

சுதந்திர தினத்தையொட்டி, ஈத்கா மைதானத்தில் தேசிய கொடி ஏற்றப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. பெங்களூருவில் 10 லட்சம் தேசிய கொடிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மநகராட்சியிடம் 2 லட்சம் தேசிய கொடிகள் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தேசிய கொடியை மக்களிடம் வழங்க உள்ளனர்.

அதே நேரத்தில் மக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு தேசிய கொடியை வழங்கவும் மாநகராட்சி தீர்மானித்துள்ளது. பெரிய அளவிலான தேசிய கொடிக்கு ரூ.25--யும், சாதாரண கொடிக்கு ரூ.10-யும் வாங்க விலை முடிவு செய்யப்பட்டுள்ளது. சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்திலும் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்படும். தற்போது ஈத்கா மைதானம் பிரச்சினையில் உள்ளது. ஆனாலும் தேசிய கொடி ஏற்றுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசே அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story