'பணமதிப்பு நீக்கத்தால் கிடைத்த ஒரே வெற்றி, பொருளாதார சீரழிவு' ராகுல் காந்தி சாடல்


பணமதிப்பு நீக்கத்தால் கிடைத்த ஒரே வெற்றி, பொருளாதார சீரழிவு  ராகுல் காந்தி சாடல்
x

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.

புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பதும் ஆகும். ஆனால் இந்த பணமதிப்பு நீக்கம் செயல்படுத்திய பின்னரும் இந்தியாவில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் புதிய 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 100 சதவீதமும், 2000 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 50 சதவீதமும் அதிகரித்து இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பணமதிப்பு நீக்கத்தால் கிடைத்த துரதிர்ஷ்டவசமான ஒரே வெற்றி, இந்திய பொருளாதாரத்தை சீரழித்ததுதான்' என குறிப்பிட்டு உள்ளார். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பையும் தனது டுவிட்டர் தளத்தில் அவர் பகிர்ந்து இருந்தார். இதைப்போல திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளன.


Next Story