தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
ஒலேநரசிப்புராவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஹாசன்:-
சிறுத்தை அட்டகாசம்
ஹாசன் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் இந்த சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி கொன்று வந்தது. மேலும் வனப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலை செல்பவர்களை இந்த சிறுத்தைகள் அச்சுறுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் பீதியில் இருந்தனர்.
மேலும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த சிறுத்தைகளை பிடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் வனத்துைறயினருக்கு கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் கூண்டுகள் வைத்து, ரகசிய மேகராக்கள் பொறுத்தியும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் அதை எளிதாக பிடிக்கவேண்டும் என்று கூண்டுகளுக்குள் நாய்களை கட்டி வைத்து காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஒலேநரசிபுராவில் வைக்கப்பட்டிருந்த கூண்டு ஒன்றில் சிறுத்தை ஒன்று சிக்கியது. இந்த சிறுத்தை கடந்த சில மாதங்களாக ஒலேநரசிபுரா தாலுகா கம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள மக்களை அச்சறுத்தி வந்தது. மேலும் வீடுகளில் கட்டி வைத்திருந்த ஆடு, மாடு, நாய்களை கடித்து குதறி கொன்றுவிட்டு சென்றது.
கூண்டில் சிக்கியது
இந்த சிறுத்தை பிடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிைலயில் நேற்று இந்த சிறுத்தை பிடிப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் வனத்துைறயினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு அருகேயுள்ள காட்டு பகுதிக்குள் விட்டு வந்தனர்.
இந்த சம்பவத்தால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மேலும் சில சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் நிரந்தரமாக இந்த சிறுத்தைகள் நடமாட்டததை கட்டுப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.