அரிவாளால் வெட்டி ரவுடி கொலை 2 ஆட்டோ டிரைவர்களுக்கு வலைவீச்சு


அரிவாளால் வெட்டி ரவுடி கொலை  2 ஆட்டோ டிரைவர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பையப்பனஹள்ளியில் அரிவாளால் வெட்டி ரவுடியை கொலை செய்த 2 ஆட்டோ டிரைவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் .

பெங்களூரு:

பெங்களூரு பையப்பனஹள்ளி கிருஷ்ணய்யனபாளையா 4-வது கிராசில் வசித்து வந்தவர் ராகுல் என்கிற பல்லு (வயது 30). பிரபல ரவுடியான இவர், தற்போது உணவு விற்பனை பிரதிநிதியாக இருந்தார். இந்த நிலையில் ராகுலின் நண்பரான ஆட்டோ டிரைவர் முருகனுக்கும், மற்ற 2 ஆட்டோ டிரைவர்களான அருண், சத்தியவேலு ஆகியோருக்கும் இடையே பணப்பிரச்சினை இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில் ராகுலை அழைத்து சென்று அருண், சத்தியவேலுவை முருகன் மிரட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பையப்பனஹள்ளி என்.ஜி.எப். ரவுண்டானா பகுதியில் ராகுல் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு சென்ற அருணும், சத்தியவேலும் சேர்ந்து கத்தி, அரிவாளால் ராகுலை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுகாயம் அடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண், சத்தியவேலுவை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story