கடந்த 2021-22-ம் நிதியாண்டின் உபரி தொகையாக மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறது


கடந்த 2021-22-ம் நிதியாண்டின் உபரி தொகையாக மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறது
x

மத்திய அரசுக்கு கடந்த 2021-22-ம் நிதியாண்டின் உபரி தொகையாக ரூ.30,307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது.

மும்பை,

மத்திய வாரிய கூட்டம் ரிசர்வ் வங்கி இயக்குனர்களின் 596-வது மத்திய வாரிய கூட்டம் கவர்னர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை கவர்னர்கள் மகேஷ்குமார் ஜெயின், மைக்கேல் தேபபிரதா பத்ரா ,ராஜேஷ்வர் ராவ் மற்றும் ரபிசங் கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர்கள், செயலாளர்கள் உள்ளிட்டவாரிய உறுப்பினர்களும் இந்தகூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கடந்த2021-22-ம் ஆண்டின் உபரி தொகையாக (ஈவுத்தொகை ) ரூ.30,307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரம் தற்செயல் அபாய இருப்பை 5.50 சதவீதமாக பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தில், நடப்பு பொருளாதார சூழல், சர்வதேச -உள்நாட்டு சவால்கள் மற்றும் சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் கடந்த 2021 ஏப்ரல் முதல் கடந்த மார்ச் மாதம் வரை யிலான ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், மேற்படி காலத்துக்கான அறிக்கைகள் மற்றும் கணக்குகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முந்தைய ஆண்டை விட குறைவு கடந்த நிதியாண்டின் உபரிதொகை ரூ.30,307 என்பது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் குறைவாகும். கடந்த 2020 ஜூலை முதல் 2021 மார்ச் வரையிலான 9 மாதங்களுக்கு மட்டுமே ரூ.99,122 கோடி உபரித்தொகை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. இது மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட உபரித்தொகையில் இரண்டாவது அதிகபட்சம் ஆகும்.

முன்னதாக கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான தொகையாக ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதில் உபரித்தொகை மட்டுமே ரூ.1.23 லட்சம் கோடி ஆகும்.


Next Story