சித்தராமையா மாநாடு நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது; மந்திரி சி.சி.பட்டீல் பேட்டி
சித்தராமையா மாநாடு நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மந்திரி சி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
கதக்:
பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கதக்கில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சித்தராமையா பிறந்த நாள் மாநாடு நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. அந்த மாநாட்டை போல் நாங்கள் தினந்தோறும் மாநாடுகளை நடத்துகிறோம். எதிர்க்கட்சிகள் தங்களின் இருப்பை காட்டி கொள்ள அத்தகைய மாநாடுகளை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் காணொலி மூலமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கதக்கில் மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். கதக் மாவட்டத்திற்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சி.சி.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story