பச்சிளம் ஆண் குழந்தையை சாலையில் வீசிய கல்நெஞ்ச தாய்
கல்நெஞ்ச தாய் பச்சிளம் ஆண் குழந்தையை சாலையில் வீசி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
பெலகாவி: பெலகாவி மாவட்டம் நிப்பானி புறநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று பெண்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் அழுகை சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பெண்கள் பார்த்தனர். அப்போது ஒரு கூடையில் பச்சிளம் ஆண் குழந்தை அழுது கொண்டு இருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் குழந்தையை பையில் இருந்து தூக்கி ஆசுவாசப்படுத்தினர்.
இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் குழந்தையை மீட்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையை பையில் வைத்து தாய் வீசி சென்றது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் குழந்தையை தாய் வீசி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story