கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் தலை துண்டித்து படுகொலை


கள்ளத்தொடர்பு விவகாரத்தில்  வாலிபர் தலை துண்டித்து படுகொலை
x

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.

மண்டியா: மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெலகோலா சிபையா சந்தை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த சரத் என்பவரின் அத்தையுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த சரத் அவரை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் கள்ளத்தொடர்பை அவர் கைவிட மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவி வேலை முடிந்து மதுக்கடை முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த சரத், ரவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் ரவி கழுத்தை வெட்டி துண்டித்து படுகொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கே.ஆர்.எஸ். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story