ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கம்: சர்வாதிகாரத்தை முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டதுஉத்தவ் தாக்கரே கருத்து


ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கம்: சர்வாதிகாரத்தை முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டதுஉத்தவ் தாக்கரே கருத்து
x
தினத்தந்தி 25 March 2023 4:45 AM IST (Updated: 25 March 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும்போது திருடனை திருடன் என்று அழைப்பது குற்றமாகி உள்ளது.

மும்பை,

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அவரது எம்.பி. பதவி பதவி பறிக்கப்பட்டது.

இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும்போது திருடனை திருடன் என்று அழைப்பது குற்றமாகி உள்ளது. ராகுல்காந்தி மீதான நடவடிக்கை ஜனநாயக படுகொலை. அனைத்து விசாரணை அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story