டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சாவு


டிராக்டர் கவிழ்ந்து   விவசாயி சாவு
x

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார்.

தார்வார்: கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா சிரகுப்பி கிராமத்தை சேர்ந்தவர் மரிதிம்மப்பா மொரபத்(வயது 34). விவசாயியான இவர், சிரகுப்பி கிராமம் நோக்கி தனது டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் டிராக்டர்,

மொரபத்தின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மொரபத், உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மொரபத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்துஉப்பள்ளி கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.


Next Story