மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் 'கந்ததகுடி' படத்தின் டிரெய்லர் வெளியானது பிரதமர் மோடி, பசவராஜ் பொம்மை வாழ்த்து


மறைந்த நடிகர்  புனித் ராஜ்குமாரின் கந்ததகுடி படத்தின் டிரெய்லர் வெளியானது  பிரதமர் மோடி, பசவராஜ் பொம்மை வாழ்த்து
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘கந்ததகுடி’ ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

பெங்களூரு:

கந்ததகுடி டிரெய்லர் வெளியானது

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் உயிரிழப்பு திரை உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புனித் ராஜ்குமாரை நினைத்து குடும்பத்தினரும், ரசிகர்களும் இன்னும் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த நிலையில் புனித் ராஜ்குமார் கடைசியாக 'கந்ததகுடி' என்ற ஆவணப்படத்தில் நடித்து இருந்தார். அந்த ஆவணப்படம் வனவிலங்குகள், இயற்கை பற்றியது ஆகும். இந்த நிலையில் அந்த

ஆவணப்படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் கந்ததகுடி ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி மற்றும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு 'கந்ததகுடி' ஆவணப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். அப்போது புனித் ராஜ்குமாரை நினைத்து அஸ்வினி கண்ணீர் விட்டார். கந்ததகுடி ஆவணப்படம் வருகிற 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 29-ந் தேதி புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வாழ்த்து

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், 'உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இதயங்களில் அப்பு (புனித் ராஜ்குமார்) வாழ்கிறார். அவர் ஆளுமை, ஆற்றல் நிறைந்தவர். கந்ததகுடி ஆவணப்படம் இயற்கை அன்னைக்கும், கர்நாடகத்தின் இயற்கை அழகுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் கிடைத்த ஒரு மரியாதை. இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பதிவில், 'கந்ததகுடி ஆவணப்படம் அப்புவின் இதயத்திற்கு நெருக்கமானது. கந்ததகுடி கர்நாடகத்தின் சொத்து. கந்ததகுடி டிரெய்லர் புதிய சாதனையை படைக்கும். எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்து இருக்கும் புத்திசாலிதனமான, பிரியமான நடிகரான அப்பு பற்றி பேசிய அன்பான வார்த்தைகளுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.


Next Story