சிறைக்கு சென்ற பெண் வீட்டில் ரூ.25 லட்சம் நகை, பணம் திருட்டு


சிறைக்கு சென்ற பெண் வீட்டில்   ரூ.25 லட்சம் நகை, பணம் திருட்டு
x

சிறைக்கு சென்ற பெண் வீட்டில் ரூ.25 லட்சம் நகை, பணம் திருட்டு நடந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு கும்பலகோடு பகுதியில் வசித்து வந்தவர் மஞ்சுநாத். இவர் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மஞ்சுநாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவி அனுசுயாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுசுயா ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த 500 கிராம் தங்கநகைகள், 5 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதன்மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். திருட்டு சம்பவம் குறித்து அனுசுயா கொடுத்த புகாரின்பேரில் கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.



Next Story