வனத்துறையினரை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்


வனத்துறையினரை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை நிலத்தை கைப்பற்ற வந்த வனத்துறையினரை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா மேகூர் கிராமத்தில் உள்ள கூலி தொழிலாளிகளுக்கு அதே பகுதியில் வீடு கட்ட அரசு சார்பில் வீடுமனை வழங்கப்பட்டது. அங்கு 4 தொழிலாளர்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டுமனை அமைந்துள்ள அமைந்துள்ள இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அந்த நிலத்தை கையகப்படுத்த வனத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களை குடிசையை காலி செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சுரேஷ் என்பவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனை பார்த்த வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் தாசில்தார் கவுரம்மா சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது அவர், வீட்டுமனை விவகாரம் குறித்து கலெக்டரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானதாக இருந்தால், தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். மேலும் வனத்துைறயினரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story