நாகரஒலே வனப்பகுதியில் 400 யானைகள் உள்ளன அதிகாரி தகவல்


நாகரஒலே வனப்பகுதியில் 400 யானைகள் உள்ளன அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு நிறைவடைந்தது. நாகரஒலே வனப்பகுதியில் 400 யானைகள் உள்ளன.

மைசூரு,-

3 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு நிறைவடைந்தது. நாகரஒலே வனப்பகுதியில் 400 யானைகள் உள்ளன.

யானை கணக்கெடுப்பு பணி

கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கோவா ஆகிய 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதாவது கடந்த 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. கர்நாடகத்தில் நாகரஒலே வனப்பகுதியில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், வனத்துறையினர், தன்னார் வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்தனர். நாகரஒலே வனப்பகுதியில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடந்தது. யானைகளின் கால்தடம், சாணம் உள்ளிட்டவை மூலமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

400 யானைகள்

இந்த நிலையில் நாகரஒலே வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மைசூரு மண்டல வனத்துறை அதிகாரி ஹரீஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகரஒலே வனப்பகுதியில் கடந்த 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இங்கு வனத்துறையினர், தன்னார்வலர்கள் 8 குழுக்களாக பிரிந்து யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்தனர். இந்த கணக்கெடுப்பு மூலம் நாகரஒலே வனப்பகுதியில் 400 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது. யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிராமங்களில் நுழையும் காட்டு யானைகளை பிடித்து ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story